புருணை வனிகா குழுமம் பொன்விழா மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மாநாடு வணிகா குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் அய்யம்பேட்டை அஞ்சுமன் அறிவகத்தின் நிறுவனருமான D.M.ஜபருல்லாஹ் அழைப்பின் பேரில் 13.09.2018 அன்று புருனையில் உள்ள Mulia ஹோட்டலில் நடைப்பெற்றது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக
தமிழ்மாநில ஜமாத்துல் உலமா தலைவர் காஜா முயினுதின் பாகவி, துபாய் பிளாக் துளிப் நிர்வாக இயக்குனர் யஹ்யா, ST கொரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி, அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவரும் துபாய் அன்னம் கேட்டரிங் கம்பெனி மற்றும் நேஷனல் ஃபுட்ஸ் கம்பெனியின் தலைவருமான குத்தாலம் ஏ. லியாகத் அலி, அமீரக காயிதேமில்லத் பேரவையின் துணைத் தலைவரும் AM டிரேடிங்ஸின் தலைவருமான திருப்பனந்தாள் முகம்மது தாஹா.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் காஜா நஜ்முதின், பொருளாளர் ஜமால் முஹம்மது, இணைச்செயலாளர் அப்துல் சமது, முதல்வர் இஸ்மாயில் முஹைதின், இயக்குனர் அப்துல் காதர் நிஹால், பிரதிபலிப்பு மாத இதழ் ஆசிரியர் அப்துல் அலிம், பிளாக் துளிப் சிக்கந்தர் பாட்ஷா, துபாய் ஆர்பிட் எக்ஸ்பிரஸ் நிர்வாக இயக்குனர் ஜெய்லானி பாஷா, திவான் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் நஜிர் அஹமது.
தங்கம் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஷேக் மைதின், தங்கம் குழுமத்தின் இயக்குனர் அப்துல் சலாம், இஸ்லாமிய பாடகர் தேரிழந்தூர் தாஜுதின், சிங்கப்பூர் தொழில் அதிபர் ஹபிப் முஹம்மது மற்றும் பலர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் புருணை தொழிலதிபர்கள் ரஸூல், அஹமது ஷஃபிர், முனாஃப், ஷேக் தாவூத், ஹிதாயதுல்லா, ஆதில் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் திரளாக பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு புருனை தொழிலதிபர்கள் பொன்னாடைகளை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.(கீழே உள்ள புகைப்படத்தில் தங்கம் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஷேக் மைதீனுக்கு புருனை ரைம்மர் நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹாஜி அஹமது பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கியபோது எடுத்தப் படம்.)
மேலும் விழாவில் புருனையைச் சேர்ந்த இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் உறுப்பினர்கள், இந்தியன் தமிழ் முஸ்லீம் ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளி நலச்சங்க உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
Syarikat Roti தாருஸ்ஸலாம் & டிரேடிங், மஹ்மூன் என்டர்பிரைஸ், வணிகா என்டர்பிரைஸ், மஹ்மூன் டிப்பார்ட்மண்ட் ஸ்டோர், சன்ரைஸ் பேக்கரி & கஃபே ஆகிய நிருவனங்கள் நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்திருந்தன.
காஜா முயினுதின் பாகவி, நவாஸ் கனி, திருப்பனந்தாள் முகம்மது தாஹா, காஜா நஜ்முதின், ஜமால் முஹம்மது ஆகியோர் புருணை தொழில் அதிபர் ஜபருல்லாஹ்வின் சேவைகளைப் பாராட்டி வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியின் இடையிடையே பாடகர் தேரிழந்தூர் தாஜுதின் பாடல்களைப் பாடினார். நிகழ்ச்சிகளை பிரதிபலிப்பு மாத இதழ் ஆசிரியர் அப்துல் அலிம் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் வணிகா குழுமத்தின் ஃபைசல் நன்றி உரையாற்றினார்.